மதராச பட்டினம்

வழக்கமான காதல் கதை, வரலாற்று பின்னனி.  ஹனிபா, வெள்ளைகார ஹீரோயின், வெள்ளைகார பாட்டி, இவங்களோட நல்ல நடிப்பு.

ரொம்ப எதிர்பார்ப்பு வேண்டாம்.

Advertisements

பையா

லூசு பசங்க கேரக்டர்லாம் ஹீரோவா காட்டுறத எப்பதான் இந்த இயக்குனர்கள் விடுவாங்களோ, இவங்களும் லூசாதான் இருப்பாங்கை..

இந்த காலத்துல இண்டர்வியூ ரூம்குள்ள போறவன் ஒரு பொண்ண பார்த்துட்டு அவ பின்னாடி போனா பின்ன அவனும் லூசு, அந்த இயக்குனரும் லூசுதான்…….

தமன்னாவை விட அந்த கருப்பு பெண் நடிப்புலயும், அழகுலயும் நல்லாயிருக்கு..

உதவாக்கரையை கூட ஒரு பக்கம் வைக்கலாம், ஆனால் நம்ம லூசு ஹீரோ கேரக்டர?

மட்டமான, உதவாக்கர, வீனாப்போன, வெளங்காத பயல்.. இந்த பையன்(பையா)

அங்காடித் தெரு

பேருந்து நிறுத்தத்தில் தொடங்கும் காட்சியில் கதாநாயகனும், கதாநாயகியும் செய்யும் சில்மிசத்துக்கு காதல் என்று சொல்லும் இயக்குனர், அவர்களின் சேட்டையை கண்டு அருகில் உள்ள அனைவரும் அருவருப்பதினால் அது தெய்வீக காதல்னு சொல்லலாம்.

அதன் பின் சைக்கிளில் போகும் ஒருத்தரை(கடை மேனேஜர்) கிண்டல் பன்னிட்டு, பேருந்து பிடித்து, சில்மிசமும் பன்னிக்கிட்டு ஒரு பிளாட்பார்ம்ல போயி படுத்துக்கிறார்கள்?

அப்போனு ஒரு லாரியும் காரும் மோதிகிட்டதால, லாரி வந்து இவர்களோட சேர்த்து பிளாட்பார்ம்ல இருந்த அத்தனை பேர் மேலயும் ஏறிடுது. ஆனால் நம் இயக்குனருக்கு மற்றவர்களை விட (அரிப்பு எடுத்த) தெய்வீக காதலர்கள்தான் முக்கியம், ஏன் என்றால் நம் ரசிகனைப் பற்றி அவருக்கு தெரியும், இவனுங்க ஏழைகளை விட அரிப்பு காதலுக்குதான் ரொம்ப அழுவாங்கை என்று.

பின்னர் அடிப்பட்ட ஹீரோவுகு மண்டை குடைஞ்சு பிளாஷ் பேக் சுத்துது.ஏழை மாணவன்னா முதல் மார்க் வாங்கனும், அவங்க அப்பா சாவனும், அவனோட பிரண்டு பெயில் ஆவனும், ரெண்டு பேரும் சேர்ந்து வேலைக்கு போவனும் எல்லாம் தமிழ் சினிமாவோட ரூல் அதை மாத்தவே மாட்டேங்கிறாகை.

வேலைக்கு ஆள் எடுக்கும், முதலளித்துவ கும்பல் ஏழையா, அப்பா இல்லாதவங்களா பார்த்து எடுக்கிறான், இதுல நம் ஹீரோவும், அல்லக்கையும் சேர்ந்துடுது, நம் தமிழ் சினிமாவின் வழக்கம் போல ஹீரோ சோகமாவும், அல்லக்கையி சந்தோசமாவும் சென்னைக்கு போறாங்க.. எதுக்கு வேலைக்கு?

சென்னை கடையில், காட்டுவது எல்லாம் நம்பள்ள 99% பேரு அனுபவிச்ச கஷ்டம்தான் வேற வேற இடத்துல, அதை நமக்கே காட்டி காசு பன்றாங்கை…

எல்லாத்தையும் சொல்றவங்கை, அதுங்க பன்ற கழிசட செயலயும், காதலயும்? சரினு சொல்வாங்கை போல, அந்த கடையில எல்லாரும் பேசற வட்டார மொழி வேற நம்ப முடியல.

ஏழ்மையான குடும்பம், ஏகப்பட்ட பொறுப்போட வந்தாலும், ஹீரோயினை பார்த்ததும் எல்லாத்தையும் மறந்துட்டு, அவ பின்னாடியே எப்படிதான் போறாங்களோ!. இவன்க சோகத்தை சொட்ட சொட்ட பிழிஞ்சு பிச்சை எடுக்கிற இயக்குனர், அவங்க குடும்பத்து நிலமையை ரெண்டு சிலைடுல காட்டுனா, இதை (காதலை)கொண்டடுற சிலுவண்டுகளாவது திருந்தும்.

இந்த கடையும், கதையும், நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்துகிட்டு இருகிறதுதான்.

இதை பார்த்துட்டு எல்லாரும், நாம அப்படி இல்லைனு போலியா நடிச்சுகிட்டு, போலியா ஒப்பாரி வைக்கிறோம்.

கடையில் நடப்பதுக்கு எதிரா, கதையை சொல்லிருந்தா சபாஷ் சொல்லலாம், ஆனால், அங்கேயும் எதையோ காதல்னு கண்ட கன்றாவிய தூக்கி பிடிச்சு, மத்ததெல்லாம் குப்பைக்கு அனுப்பிட்டு

தனக்கும், அந்த கடை அன்னாச்சிக்கும் வித்தியாசமே இல்லைனு சொல்றார்ரு இந்த இயக்குனர்.

கிராமத்தானையும், அன்னாச்சிகளையும் தோலுரிச்சு காமிக்கிற இந்த இயக்குநர்கள், சினிமா தொழில்ல நடக்குறத ஏண் முழுசா (?)காட்டறதே இல்ல?

அவள் பெயர் தமிழரசி

ஆரம்பம் கொஞ்சம் வித்தியசமாகத்தான் தெரியுது, சினிமா மற்றும் டி.வி வந்ததால் நம்மால் ஓரங்கட்டப்பட்ட பாவு கூத்து மற்றும் அந்த கலைஞர்களின் வாழ்க்கை போராட்டமும், அதனுடனே வரும் நம் தமிழ் சினிமாவின் வழக்கமான காதலும் தான் கதை. கூத்து கலைஞர்களின் தற்போதைய நிலையை நம் கண்முன்னே காட்டுகிறார்கள். அவர்களின் வறுமையான வாழ்விலும் கையேந்த கூசும் மனம், கலைக்கான அர்ப்பனிப்பு, இன்னும் அவர்களின் வாழ்க்கை எல்லாம் நமக்கு புதுசுதான். பின் நம் கிராமத்து பெரிய இடத்து பையனுக்கும், கூத்து கலைஞரின் வீட்டு பெண்ணுக்கும் வரும் காதல், பிரிவு, சோகம், சுபம் எல்லாம் நமக்கு பழசுதான். பைனலாய்: பாராட்டலாம்..

அவதார்-விமர்சணம்

அவதார்-விமர்சணம்

பூமீ மனிதர்களின் பேராசை, நாடுகளை பிடிப்பதை கடந்தால் எங்கு செல்லும் என்பதை கற்பனையால் காட்சி படுத்தியுள்ளனர்.ஹாலிவுட்காரர்களின் பணத்தில் கற்பனை குதிரை வேறு ஒரு கிரகத்தில் போயி தாவுகிறது நாலு கால் பாயிச்சலில்,

வேற்று கிரகம்-கற்பனை கொஞ்சம் கம்மிதான், இதை விட நம் புரானங்களில் கூடுதலாகவே உண்டு என நினைக்கிறேன்.

ஆனால், கொஞ்சம் கற்பனையும் அழகாக திரையில் வந்திருகிறது.

பெரிய ஒளி வீசும் பூக்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள், மலைகள், அருவிகள், மனிதர்கள் எல்லாம் நம்மை வியக்க வைக்கின்றன.

நமது ஹீரோ, முன்னாள் ரானுவ வீரன் (இரு கால்களையும் இழந்தவன்).

காலுகளை சரி செய்ய பனத்துக்காக, நாட்டின் நவீன ஆராய்சிக்கு தன்னையே கொடுக்கிறான். கூடு விட்டு கூடு பாயும் நவீன டெக்னிக் மூலம் வேற்று கிரகவாசி போல உருவாக்க பட்ட அவதார் எனும் கூடுக்குள் நுழைந்து,வேற்று கிரகம் சென்று, அவர்களுடன் பழகி, அவர்களின் பலம், பலவீனம் கண்டறியும் உளவு வேலை செய்ய வேண்டும், செய்கிறார்.

வேற்று கிரகத்தில் நுழைந்ததும், சில ஆபத்தான விலங்குகளிடம் இருந்து அந்த கிரகத்தின் பெண் (ஹீரோயின்) காப்பாற்றுகிறார். பின்னர், அவர்களின் தலைவர் விசாரனைகளின் பின்னால், அவர்களின் டெஷ்டில் தேறினால் அவர்களுடன் வாழலாம் என்பது (நாட்டாமை?) தீர்ப்பு.டெஷ்டுக்கு ஹீரோயின் உதவுகிறார், காதலும் கொள்கிறார்.

பின் நம் ஹீரோ பற்றி உண்மை தெரிந்து விடுகிறது, அங்கே ஹீரோவை கொல்ல போகிறார்கள், அப்போது பார்த்து பூமிவாசிகள் கிரகவாசிகளை அழிக்க வருகிறார்கள், பின்னர் ஹீரோவும் சில நன்பர்களும் சேர்ந்து கிரகவாசிகளை காப்பாற்றுகிறார்கள்.

பைனலாய், பழைய கள் புதிய டெக்னாலஜி மொந்தையில்

சுபம்.

குருவியா?? கொக்கா??

டாக்டர் விஜயின் அடுத்த படம். 

இதில் அவர் ஒரு பைக் ரேஸர். 

குருவி படத்தில் கார் ரேஸில் எப்படி ஆக்சிலேட்டர் கட் ஆனதும் அதன் வயரை பல்லால் பிடித்து இழுத்து முதல் பரிசு பெறுகிறாரோ, அதுமாதிரியான சாகச காட்சிகள் நிறைந்த படம்.
 

 
 

ஒரு காட்சி மட்டும் சாம்பிளுக்காக
 

 
 

…. 
… 
…. 
… 
… 
…  
… 
…. 
டாக்டர் விஜய் பைக் ரேஸில் கலந்துக்கொள்கிறார்… 
… 
…. 
… 
… 
… 
… 
… 
… 
…. 
… 
வில்லனின் சதியால் பாதியில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது… 
… 
… 
… 
… 
… 
… 
… 
… 
… 
… 
ஆனாலும் முதல் பரிசு வென்றுவிடுகிறார்..
… 
… 
… 
… 
…. 
… 
… 
… 
…. 
….. 

.. 

.. 

.. 

.. 

.. 

.. 

.. 

எப்படி????? 

… 
… 
… 
… 
…. 
… 
… 
… 
… 
….
… 
… 
… 
…. 
… 
…. 
… 
… 
… 
….
 

என்ன யூகிக்க முடியலயா? அப்ப இன்னும் கீழ போங்க….... 
 

… 
… 
… 
….. 
…. 
… 
… 
… 
… 
…. 
… 
…. 
… 
… 
…. 
… 
… 
… 
… 
…. 
… 
… 
… 
…  

 cid:1.3207378681@web110304.mail.gq1.yahoo.com

எப்பூடிடிடிடிடிடிடிடிடிடிடி??????? குருவியா?? கொக்கா?? வரட்டாங்கனா!!!