குட்டிக்கதை

ஒரு சமயம் சீக்கிய மத ஸ்தாபகரான குருநானக் தன்னுடைய சீடர்களுடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய சென்றார். அவர் வரும் வழியெல்லாம் தென்பட்ட சிற்றூர்களுக்குள் புகுந்து அறம் செய்ய வேண்டிய அவசியத்தையும் தர்மத்தையும் போதித்தார்.

ஒரு நாள் ஒரு கிராமத்துக்குள் மாலை வேளையில் அவர் பிரவேசித்தார். அவருக்கும், அவருடன் வந்த சீடர்களுக்கும் கடுமையான பசி, நீர்வேட்கை. இத்துடன் குளிர் வெட வெடக்க வைப்பதாக இருந்தது.

அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி உணவும், நீரும், போர்வையும் தரும்படி வேண்டினர். அந்தக் கிராம மக்கள் இவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை; அலட்சியப்படுத்தினர். ஒருவராவது எதுவும் தரவில்லை.

அன்றிரவு முழுவதும் அவர்கள் பசியிலும், தாகத்திலும் குளிரிலும் தவித்தனர். மறு நாள் காலையில் அந்தக் கிராமத்தை விட்டு விடியற்காலையிலேயே கிளம்பினர். அப்போது குருநானக் அந்தக் கிராம மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.

“”எல்லாவற்றையும் அறிந்திருக்கக் கூடிய சர்வ வல்லமைப் படைத்த கடவுளே! இந்தக் கிராமத்து மக்கள் இப்படியே, இங்கேயே நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்!”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்களின் மனம் கொதித்தது. “ஈவு, இரக்கம், மனிதாபிமானம், தர்ம சிந்தனை ஆகிய எதுவும் இல்லாத இந்தக் கிராம மக்களுக்காக இப்படிப்பட்ட ஒரு பிரார்த்தனை தேவையா?’

“ஏன் இப்படிச் செய்தார் நம் குரு?’

அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. குருவிடம் கேட்கலாமா, வேண்டாமா என்றும் தெரியவில்லை! என்றாலும் எவரும் கேட்கவில்லை. அவர்கள் அங்கிருந்து நடக்கத் துவங்கினர். அன்றைய தினம் மாலையில் அதே போல மற்றொரு கிராமத்தை அவர்கள் அடைந்தனர். அதற்குள் பலருக்கும் பசிக் கிறுகிறுப்பு காதை அடைத்து இருந்தது.

“இங்கு என்ன நிலைமையோ?’ என்று பதைபதைப்புடன் இருந்தனர் அவர்கள்.

அந்தக் கிராம மக்கள் குருநானக்கையும், அவருடைய சீடர்களையும் கண்டவுடன், “”வாருங்கள், வாருங்கள்…” என்று மிக மிக அன்புடன் வரவேற்றனர்.

“”சாப்பிடுகிறீர்களா, நீர் அருந்துகிறீர்களா?” என்று கனிவுடன் விசாரித்தனர். சொன்னதோடு நிற்காமல் செயலிலும் காட்டினர். அவர்களுக்கு உணவு தரப்பட்டது. நீர் தரப்பட்டது. தங்கியிருக்க இடம் தரப்பட்டது. படுக்கை தரப்பட்டது. பசியாறிய அவர்கள் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு குருநானக்கின் உபதேசங்களைக் கேட்க ஊர் மக்கள் திரண்டனர். குருநானக் மிக அழகிய முறையில் அவர்களுக்கு உபதேசம் செய்தார்.

சீடர்கள் பெருமிதம் அடைந்தனர்.

“”இது நல்லவர்கள் வாழும் பூமி, சிறந்த கிராமம்?” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

மறுநாள் காலை அந்தக் கிராமத்திலிருந்து அனைவரும் புறப்பட்டனர். குருநானக் அந்தக் கிராமத்து மக்கள் சார்பாகப் பிரார்த்தனை செய்தார்.

“”எல்லாரையும் அறிந்திருக்கின்ற ஆண்டவனே இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்காக நான் உன்னிடம் பிரார்த்தனை செய்கிறேன். இந்தக் கிராமத்தில் வசிக்கக் கூடிய இந்த மக்கள் அனைவரும் இந்தக் கிராமத்தை விட்டுத் தனித்தனியாகப் பிரிந்து மூலைக்கொரு திசையாகப் பிரிந்து போய்விட வேண்டும்!. அதற்கு தாங்கள் தான் அருள்புரிய வேண்டும்.” என்றார்

இந்தப் பிரார்த்தனையையும் சீடர்கள் கேட்டனர். அவர்கள் மனதில் ஆச்சர்யம் உண்டாயிற்று; அதிர்ச்சி கிளம்பியது.

“”என்ன இது இப்படிப்பட்ட பிரார்த்தனையை செய்கிறாரே நம் குரு… இது நியாயமா? முந்தைய கிராமத்தில் இவர் செய்தது ஆசீர்வாதம். இப்போது செய்தது ஆசீர்வாதமல்ல; சாபம். இப்படிச் செய்யலாமா?

“”இது நியாயமா, ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பிரார்த்தனை செய்கிறார் நம் குரு!” இதைக் கேட்டு விட வேண்டும்! என்று எண்ணினர். ஆயினும் அவரிடம் கேட்க ஒருவருக்காவது துணிவு இல்லை. சீடர்களின் மன நிலையை அறிந்தார் குரு.

“”அன்பானவர்களே என் பிரார்த்தனை உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கக் கூடும். அற நெறிகளைக் கடைப்பிடிக்காத முந்தையக் கிராமத்தில் உள்ள மக்கள் வேறு ஏதாவது ஒரு இடத்துக்குச் சென்றால் அந்த இடத்தையும் அல்லவோ கெடுத்துவிடுவர். எனவே, தான் அவர்கள் அந்தக் கிராமத்திலேயே இருக்க வேண்டும். வெளியேறி விடக் கூடாது என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டேன்.

“”ஆனால், இந்தக் கிராம மக்களோ தெய்வ பக்தி உடையவர்கள், அறநெறிகளைப் பின்பற்றுகின்றனர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர். பெரியவர்களையும் அறவழி யில் செல்லுபவர்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள்.

“”விருந்தினர்கள் நன்றாக வரவேற்கத் தெரிந்தவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் ஒரே கிராமத்திலே இருப்பதை விட இந்த ஊர் எங்கும் நகரம் எங்கும், நாடு எங்கும் பரவி இருக்க வேண்டும். அவ்வாறு பரவி இருந்தால் அவர்கள் எல்லாருக்கும் நன்மை செய்பவர்களாக இருப்பர். அவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்துவர். இதற்காகத் தான் இவர்கள் திசைக்கு ஒருவராக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்,” என்று விளக்கம் கூறினார்.

குருநானக்கின் இந்த விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் குருவின் நல்ல எண்ணத்தையும் அவருடைய சீரிய சிந்தனையையும் எண்ணி வியந்தனர்.

Advertisements

நல்லதைக் கேட்க வேண்டும்!

ஞானியிடம் சென்ற ஒருவர் ஐயா, உங்கள் சீடனைப் பற்றிய முக்கியமான செய்தி ஒன்றைச் சொல்வதற்காக வந்திருக்கிறேன் என்றார்.
ஞானி அவரிடம் முதலில் எனது மூன்று கேள்விகளுக்குப் பதில் சொல் என்று விட்டு ” நீ சொல்லப்போகும் விஷயம் உன் முன் நடந்ததா? எனக் கேட்டார். வந்தவர் ‘இல்லை’ என்றார்.
அடுத்து ‘நீங்கள் சொல்லப்போவது கெட்ட விஷயமா? நல்ல விஷயமா?’ எனக் கேட்டார்.
கெட்ட விஷயம் வந்தவர் சொன்னார்.
இதைக்கேட்டால் எனக்கு ஏதாவது லாபம் நஷ்டம் உண்டா?
அப்படி எதுவும் இல்லை.
உமக்கே உண்மையா பொய்யா எனத் தெரியாது. கேட்காவிட்டால் எந்த நஷ்டமும் இல்லை. அதுவோ கெட்ட விஷயம். நல்லதும் உண்மையும் அல்லாத அதை ஏன் நான் கேட்க வேண்டும்? எனக் கேட்ட ஞானி, வந்தவரைத் திருப்பியனுப்பினார்.

நன்றி;

குமுதம் பக்தி ஸ்பெஷல்

சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை!

 “சார்! ரொம்ப நாளா உங்களை ஒண்ணு கேக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்”

“என்ன அது.. எதுவா இருந்தாலும் கேளுங்க…”

” சமீபகாலமா நீங்க சட்டையே போடுறதில்லையே… வெறும் வேட்டியோட வெளியில திரியறீங்களே…அது ஏன்?”

“சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை”

“மகான்கள் மாதிரி பேசுறீங்களே…”

“உண்மை தான்… ஒரு ராஜா எப்பவும் துன்பப்பட்டுக்கிட்டே இருந்தாராம். ஒரு வேதாந்திரியைக் கூப்பிட்டு, என் துன்பம் தீர என்ன வழின்னு கேட்டாராம். அதுக்கு அந்த வேதாந்திரி ‘போதும் என்ற மனசுடைய ஒருத்தனை தேடி கண்டுபிடிச்சி, அவனுடைய சட்டையை வாங்கி போட்டுக்க, உன் கவலை போய்டும்’ னு சொன்னாராம்”

“அட.. சுலபமான வழியா இருக்கே…”

“அப்படித்தான் அந்த ராஜாவும் நினைச்சிகிட்டு ராஜாவும் அந்த மனுஷனைத் தேடி அலைஞ்சாராம். ஆனா யாருக்குமே போதும்ங என்ற மனசே இல்லாததால நொந்து போனாராம். கடைசியில ஒருத்தன் கிடைச்சானாம். ஆனா அவன் சட்டையே போடலை”

“சிந்திக்க வேண்டிய விஷயம் சார். நீங்களும் அந்த மனுஷன் மாதிரி தானா?”

“நானும் ‘போதும்டா சாமி’ என்பதால் தான் சட்டை போடல. ஆனா என் கதை வேற மாதிரி”

“எப்படி சார்”

“ஆரம்பத்துல நானும் சட்டை போட்டுக்கிட்டு தான் இருந்தேன். என் சட்டையை என் கையால துவைச்சி போடுவேன், அடுத்தவங்களுக்கு சிரமம் கொடுக்க மாட்டேன். கல்யாணம் ஆனதுக்கு பிறகு என் மனைவி துவைக்க ஆரம்பிச்சாங்க. அதுதான் எனக்கு கஷ்டமா போச்சு! அப்புறம் தான் சட்டையே போட வேணம்னு விட்டுட்டேன்!

“மனைவிக்கு சிரமம் கொடுக்கக் கூடாதுங்கிறதுக்காகவா?”

“இல்ல..எனக்கு சங்கடம் வேணாம்னுதான்”

“என்ன சொல்றீங்க?”

” பொதுவா சட்டையை கழட்டுனதுக்கு அப்புறம் தானே துவைப்பாங்க… ஆனா என் மனைவி நான் சட்டையை கழட்டுறதுக்கு முன்னாடியே துவைக்க ஆரம்பிச்சிடுவா!”

நன்றி – அம்புலிமாமா

ஓசோ

நான் எந்தவிதமான ஓழுங்கங்களையும் கட்டுப்பாடுகளையும் கநான் எந்தவிதமான ஓழுங்கங்களையும் கட்டுப்பாடுகளையும் கற்பிப்பதில்லை. பிரக்ஞை மட்டுமே நான் கற்பிக்கும் விடயம். பிரக்ஞையுடன் நீங்கள் ஏது செய்தாலும் அது சரியாக இருக்க வேண்டும். ஏனனில் பிரக்ஞையில் நீங்கள் ஏதுவும் தவறாக செய்ய முடியாது. இக் கணத்தை எவ்வாறு அழகுபடுத்துவது என்பது தான் எனது முழு முயற்சியும். மனிதர்கள் மேலும் ஆனந்தமாகவும் கொண்டாட்டமாகவும் வாழ்வதற்கு என்ன செய்வது? எவ்வாறு அவர்களை தயார் படுத்துவது? இதன் சிறு அளவையாவது சுவைக்க எவ்வாறு வழங்குவது? உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு சிரிப்பை வரவழைப்பது? என்பதே என் முழு முயற்சியும். நான் ஒரு இறுக்கமான மனிதனல்ல விளையாட்டுத்தனத்திலிருந்தே உங்களுக்கு சொல்லவேண்டியதை சொல்கின்றேன். என்னுடைய செய்தி மிகவும் சாதாரணமானது. கடவுள் எனக்குள் இருக்கின்றார் என்பதைக் கண்டுபிடித்தேன். என்னுடைய முழு முயற்சியும் உங்களையும் உங்கள் உள்ளே பார்க்கச் செய்வதே. இது சாத்தியமானது. இதற்காக உங்களுக்கு உதவி செய்வதற்கோ அல்லது பாதுகாப்பளிப்பதற்கோ நான் இங்கு இருக்கவில்லை. உங்களுக்கு உதவி செய்தால் பழையதே தொடரும். எல்லாவகையான உதவிகளும் பழையனவற்றுக்கு உதவுவதற்கே. பழைய வாழ்விற்கே. நான் எந்தவகையிலும் இதற்கு உதவப் போவதில்லை. மாறாக உங்களை அழிப்பதற்கே வந்திருக்கின்றேன். ஏனனில் அதிலிருந்துதான் புதியது பிறக்கும். புதிய மனிதர். புதிய பிரக்ஞை. எனக்கு என்னுடைய கருத்தியலுக்கு மற்றவர்களை மாற்றவேண்டும் என்பதில் எந்தவிதமான ஆர்வமும் இல்லை. அப்படி ஒரு கருத்தியலும் என்னிடம் இல்லை. ஒருவரை இன்னுமொரு கருத்தியலுக்கு மாற்ற முயற்சிப்பது அடிப்படையில் ஒரு வன்முறையான செய்பாடு என்பதே என் நம்பிக்கை. இது ஒருவரின் தனித்துவத்தில் தலையீடுவதாகும். தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவதாகும். நீங்கள் நினைப்பது போல் நான் ஒரு ஆன்மிகவாதியல்ல. நான் எந்தக் கோயில்களுக்கும் சென்றதில்லை. எந்த சமய புத்தகங்களும் கற்றதில்லை. எதையும் பின்பற்றியதுமில்;லை. கடவுளை வணங்கியதுமில்லை பிராத்தித்ததுமில்லை. அது என் வழியல்ல. நீங்கள் நினைக்கும் ஆன்மிக செயற்பாடுகள் ஒன்றும் நான் செய்ததில்லை. எனது ஆன்மீகம் வேறுவகையானது. இதற்கு நேர்மையான மனிதர் தேவை. இது யாரிலும் தங்கியிருப்பதற்கு விடாது. எந்த விலை கொடுத்தும் சுதந்திரமாக இருக்கும். கூட்டத்தலிருந்து தனித்து இருக்கும். ஏனனில் கூட்டம் உண்மையை கண்டுபிடிப்பதற்கல்ல. உண்மையை ஒவ்வொருவரும் தனித்தனியாகவே அறியலாம். என் முழு முயற்சியும் ஒரு புதிய ஆரம்பத்திற்கே. இதனால் உலகம் முழுவதிலிருந்தும் எனக்கு எதிரான கருத்துக்கள் கண்டனங்கள் வருவதும் தவிர்க்கமுடியாதது. அதைப்பற்றி பரவாயில்லை. அதை யார் கணக்கில் எடுப்பது. நீங்கள் என்னைப் புரிந்துகொள்வதற்காக நான் இங்கு இல்லை. உங்களை நீங்கள் புரிந்து கொள்வதற்காகவே நான் இங்கு இருக்கின்றேன். நீங்கள் ஒரு திறக்கப்படாத புத்தகம். அது திறக்கப்படவேண்டும். அதை எவ்வாறு திறப்பது என்பதையும் அதற்கான சாவியையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தவே இங்கு நான் இருக்கின்றேன். சாவியைக் கொண்டு புத்தகத்தை திறந்து விட்டீர்கள் என்றால் உங்கள் பயணம் தொடரும்… உங்களுக்கான பாதையில்… என் வேலை அதனுடன் முடிந்துவிடும். இதன் பின் நான் தேவையில்லை. ஓசோ தொடர்பாக மேலும் அறிவதற்கு அவரது புத்தகங்களே வாசிப்;பதே ஒரு வழி. மிகச் சரியான வழி அவர் வழிகாட்டும் பாதையில் தியானம் செய்வதன் மூலம் பயணிப்பது, அனுபவத்தில் அறிவது. osho.கம நன்றி :-http://www.fixbuy.com/ ற்பிப்பதில்லை. பிரக்ஞை மட்டுமே நான் கற்பிக்கும் விடயம். பிரக்ஞையுடன் நீங்கள் ஏது செய்தாலும் அது சரியாக இருக்க வேண்டும். ஏனனில் பிரக்ஞையில் நீங்கள் ஏதுவும் தவறாக செய்ய முடியாது. இக் கணத்தை எவ்வாறு அழகுபடுத்துவது என்பது தான் எனது முழு முயற்சியும். மனிதர்கள் மேலும் ஆனந்தமாகவும் கொண்டாட்டமாகவும் வாழ்வதற்கு என்ன செய்வது? எவ்வாறு அவர்களை தயார் படுத்துவது? இதன் சிறு அளவையாவது சுவைக்க எவ்வாறு வழங்குவது? உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு சிரிப்பை வரவழைப்பது? என்பதே என் முழு முயற்சியும். நான் ஒரு இறுக்கமான மனிதனல்ல விளையாட்டுத்தனத்திலிருந்தே உங்களுக்கு சொல்லவேண்டியதை சொல்கின்றேன். என்னுடைய செய்தி மிகவும் சாதாரணமானது. கடவுள் எனக்குள் இருக்கின்றார் என்பதைக் கண்டுபிடித்தேன். என்னுடைய முழு முயற்சியும் உங்களையும் உங்கள் உள்ளே பார்க்கச் செய்வதே. இது சாத்தியமானது. இதற்காக உங்களுக்கு உதவி செய்வதற்கோ அல்லது பாதுகாப்பளிப்பதற்கோ நான் இங்கு இருக்கவில்லை. உங்களுக்கு உதவி செய்தால் பழையதே தொடரும். எல்லாவகையான உதவிகளும் பழையனவற்றுக்கு உதவுவதற்கே. பழைய வாழ்விற்கே. நான் எந்தவகையிலும் இதற்கு உதவப் போவதில்லை. மாறாக உங்களை அழிப்பதற்கே வந்திருக்கின்றேன். ஏனனில் அதிலிருந்துதான் புதியது பிறக்கும். புதிய மனிதர். புதிய பிரக்ஞை. எனக்கு என்னுடைய கருத்தியலுக்கு மற்றவர்களை மாற்றவேண்டும் என்பதில் எந்தவிதமான ஆர்வமும் இல்லை. அப்படி ஒரு கருத்தியலும் என்னிடம் இல்லை. ஒருவரை இன்னுமொரு கருத்தியலுக்கு மாற்ற முயற்சிப்பது அடிப்படையில் ஒரு வன்முறையான செய்பாடு என்பதே என் நம்பிக்கை. இது ஒருவரின் தனித்துவத்தில் தலையீடுவதாகும். தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவதாகும். நீங்கள் நினைப்பது போல் நான் ஒரு ஆன்மிகவாதியல்ல. நான் எந்தக் கோயில்களுக்கும் சென்றதில்லை. எந்த சமய புத்தகங்களும் கற்றதில்லை. எதையும் பின்பற்றியதுமில்;லை. கடவுளை வணங்கியதுமில்லை பிராத்தித்ததுமில்லை. அது என் வழியல்ல. நீங்கள் நினைக்கும் ஆன்மிக செயற்பாடுகள் ஒன்றும் நான் செய்ததில்லை. எனது ஆன்மீகம் வேறுவகையானது. இதற்கு நேர்மையான மனிதர் தேவை. இது யாரிலும் தங்கியிருப்பதற்கு விடாது. எந்த விலை கொடுத்தும் சுதந்திரமாக இருக்கும். கூட்டத்தலிருந்து தனித்து இருக்கும். ஏனனில் கூட்டம் உண்மையை கண்டுபிடிப்பதற்கல்ல. உண்மையை ஒவ்வொருவரும் தனித்தனியாகவே அறியலாம். என் முழு முயற்சியும் ஒரு புதிய ஆரம்பத்திற்கே. இதனால் உலகம் முழுவதிலிருந்தும் எனக்கு எதிரான கருத்துக்கள் கண்டனங்கள் வருவதும் தவிர்க்கமுடியாதது. அதைப்பற்றி பரவாயில்லை. அதை யார் கணக்கில் எடுப்பது. நீங்கள் என்னைப் புரிந்துகொள்வதற்காக நான் இங்கு இல்லை. உங்களை நீங்கள் புரிந்து கொள்வதற்காகவே நான் இங்கு இருக்கின்றேன். நீங்கள் ஒரு திறக்கப்படாத புத்தகம். அது திறக்கப்படவேண்டும். அதை எவ்வாறு திறப்பது என்பதையும் அதற்கான சாவியையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தவே இங்கு நான் இருக்கின்றேன். சாவியைக் கொண்டு புத்தகத்தை திறந்து விட்டீர்கள் என்றால் உங்கள் பயணம் தொடரும்… உங்களுக்கான பாதையில்… என் வேலை அதனுடன் முடிந்துவிடும். இதன் பின் நான் தேவையில்லை. ஓசோ தொடர்பாக மேலும் அறிவதற்கு அவரது புத்தகங்களே வாசிப்;பதே ஒரு வழி. மிகச் சரியான வழி அவர் வழிகாட்டும் பாதையில் தியானம் செய்வதன் மூலம் பயணிப்பது, அனுபவத்தில் அறிவது. osho.கம நன்றி :-http://www.fixbuy.com/

சில நேரங்களில் சில மனிதர்கள்

cid:2.3185371797@web95403.mail.in2.yahoo.com

கடவுளின் கனிவு!

பக்தர் ஒருவர் தம்மால் இயன்ற உதவியினை பலருக்குச் செய்து வந்தார். ஒரு நாள் கடும் பசியோடு ஒரு பெரியவர் வந்து உணவு கேட்கவும் அவரை உட்கார வைத்து உணவு பரிமாறிவிட்டு ஐயா! இந்த உணவை அளித்த இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு பிறகு சாப்பிடுங்கள் என்றார். – உணவு அளித்த உமக்கு நன்றி சொல்கிறேன். கடவுள் என்பதெல்லாம் பொய். அவருக்கு ஏன் நான் நன்றி சொல்ல வேண்டும்? என்று பெரியவர் சொன்னதும் அவரை சாப்பிடவிடாமல் அனுப்பினார் பக்தர் – அன்றிரவு இறைவன் பக்தரின் கனவில் தோன்றி பிறந்தது முதல் என் பெயரை ஒருபோதும் சொல்லாத அவருக்கு இத்தனை நாள் நான் உணவு கிடைக்கச் செய்திருக்கிறேன். ஆனால் நீயோ என் பெயர் சொல்லாததற்காக அவரைப் பட்டினியாக அனுப்பிவிட்டாயே! என்று கூற, இறைவன் எவரிடமும் பேதம் பார்ப்பதில்லை என்பதை உணர்ந்தார் பக்தர். நன்றி; குமுதம் பக்தி ஸ்பெஷல்

நாம் வெற்றி பெறுவதற்கான வழிகள்

நாம் எல்லோரும் ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கின்றோம் . ஆனால், எல்லோருக்கும் வெற்றி கிடைக்கிறதா ? இல்லையே . வெற்றியையும், தோல்வியையும் சமமாக மதிக்கும் பண்பும் வேண்டும் . தோல்வி தான் வெற்றியின் முதல் படி . அப்படி இருக்கும் போது நாம் என்ன செய்தால் , எப்பிடி செய்தால் வெற்றி பெறலாம் என்பதனை நாம் சிந்திக்கின்றோமா ?
https://i0.wp.com/press.princeton.edu/images/k8132.gif
ம்ம்ம் நாம் வெற்றி பெற என்ன வழிகள் உண்டு ? எப்பிடி நடந்தால் வெற்றி கிடைக்கும் ? வெற்றி பெறுவதற்க்கு என்ன வழிகள் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .
https://i2.wp.com/www.dbsalliance.org/images/content/pagebuilder/23113.jpg
நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை வெற்றிகரமாகச் செய்வது என்பதை நோக்கி நகர நகர சாதனை என்பதே சுலபமான வேலையாகி விடுகிறது. நாம் நமது  தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும் , அதை திருத்திக் கொள்வதற்க்கான  பலனும் தான் வெற்றிக்கான வழிகள் ஆகும் .எமக்கு வெற்றியைவிட தோல்விதான் அதிகப் படிப்பினைகளைச் சொல்லிக் கொடுக்கிறது.
காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது. காலத்தை வீணாக்காமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும் . வெற்றிக்கான வழிகளை கண்டறிய வேண்டும் .வெற்றிக்கான வழிகளை விடாமுயற்சி, சோம்பலின்மை, தகவல் தொடர்புத்திறன், அறிவுத்திறன் போன்ற தகுதிகள் பல்வேறு விகிதத்தில் ஒன்று கலந்து வெற்றிக்கான பாதையை அமைத்துக் கொடுக்கின்றன. //
https://i1.wp.com/powerpoint.in/wp-content/uploads/2009/02/sucess-ppt-300x261.jpg
புதிய புதிய தகவல்களை தேடி கொண்டு இருக்க வேண்டும் . நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று இருப்பது பெரிய விடயமல்ல . அதனை எவ்வாறு தக்க வைத்துக்கொள்வது என்பது தான் முக்கியமான விடயம் . அதாவது சிறந்த நடிகர் என்ற பட்டம் மட்டும் ஒரு நடிகருக்கு போதாது . அதனை அவர் காலா , காலமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் . https://i1.wp.com/www.einsteinindustries.com/images/graphic-success.jpg
வெற்றிபெற விரும்புகிறவர்களுக்கு  முக்கியமான இன்னொரு பண்பு, புதிய மனிதர்களையும் புதிய சூழல்களையும் தயக்கமில்லாமல் எதிர்கொள்வது. பக்கத்தில் யாராவது புதிதாகக்குடியேற வந்தால் , அவர்களாக வந்து அறிமுகம் செய்துகொள்ளும்வரை காத்திருக்காமல், நீங்களாகச் சென்று அறிமுகம் செய்து கொள்வதில் தொடங்கி, முற்றிலும் அந்நியமான சூழலில் ஏற்படும் வாய்ப்புகளைக் கூச்சமில்லாமல் எதிர்கொண்டு, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதுவரை எத்தனையோ நிலைகளுக்கு இது பொருந்தும்.
https://i2.wp.com/www.homeinternet-business.com/blog/wp-content/uploads/2009/11/success-3.jpg
பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும். நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது. இதனை மனதில் கொள்ள வேண்டும் .https://i2.wp.com/www.jeffnguyen.com/wp-content/uploads/2009/02/robert-st-john-8-words-for-success1.bmp
நீங்கள் வெற்றி பெற இதனையும் கவனத்தில் கொள்ளுங்கள் .
 எல்லோரிடனும் அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள், இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்,  நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்,  ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள், ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள் , ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்,  ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள், எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள், உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்,  இனிய சொற்களை மற்றவர்களுடன் பேசும் போது பேசுங்கள் .
http://reasonsoflife.files.wordpress.com/2008/08/success2.png?w=317&h=320
இவை தான் உங்களை வெற்றி பாதைக்கு இட்டு செல்லும் வழிகள் ஆகும் . இவற்றை கடைப்பிடித்து வெற்றி பெறுங்கள் . வாழ்வில் வெற்றி , வாழ்க்கைக்கு வெற்றி , புதிய வசந்தத்தின் வெற்றி என உங்கள் வாழ்வில் என்றுமே வெற்றி தான் இருக்க வேண்டும் .
 
என்றும் வெற்றி, எப்போதும் வெற்றி , எல்லோருக்கும் வெற்றி தான் கிடைக்க வேண்டும் என நான் வாழ்த்துகின்றேன் .https://i2.wp.com/api.ning.com/files/Sf5NtxbD8B0ZNKcS1jVDVHBRq297Tgg9CoIUoR9*kT5uXgPaVPFYCFrkA1Hsr20KJ5lCxwa7tAwPmZnCC3FnXpt6vC0cVZ1a/success.jpg

வெற்றிக்கான வழிகளாக வள்ளுவர் கூறுகிறார் . எண்ணத்தில் உறுதி, விடாமுயற்சி ,வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும். காலம் நீடித்தல்,  மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்று சொல்கின்றார் . //