திமுக வின் போர்வாள், முகவின் கைத்தடி திருமாவளவன் அறிக்கை

பிரபாகரன் தாயார் திருப்பி அனுப்பப்பட்டதற்கு ஜெயலலிதாதான் காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 16-4-2010 இரவு மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் அவரை இறங்க அனுமதிக்காமல் தடுத்து, அதே விமானத்தில் மலேசியாவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பி விட்டனர்.

இந்திய குடிவரவைச் சார்ந்த அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொண்டதற்கு, கடந்த 2003-ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை சுற்றறிக்கையே காரணம் என்பது தெரியவருகிறது. அதாவது, 1980-க்கு பின்னர் தமிழகத்திற்கு வந்த பிரபாகரனின் பெற்றோர் 2003-ம் ஆண்டு வரையில் திருச்சியிலேயே தங்கியிருந்தனர்.

2002-ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து பலரும் ஈழத்திற்கு திரும்பினர். அதேபோல பிரபாகரனின் பெற்றோரும் 2003-ம் ஆண்டு தமது தாயகத்திற்கு திரும்பினர். அப்போது தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்து ஜெயலலிதா, பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் தமிழகத்திற்கு வர தடை விதிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருக்கிறார்.

அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில்தான் அவர்கள் தமிழகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அந்தத் தடையின் அடிப்படையில்தான் அதிகாரிகள் பார்வதி அம்மாளை சென்னையில் இறக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிய வருகிறது. அதாவது, பார்வதி அம்மாளை திருப்பி அனுப்புவதற்கு அன்றைய அ.தி.மு.க. அரசு பெற்ற தடையாணைதான் காரணம் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

எனினும், அதனை காரணம் காட்டி அவரை இங்கு மருத்துவம் பெறவிடாமல் திருப்பி அனுப்பிய நடவடிக்கையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இந்த நிலையில் இந்திய அரசின் அனுமதி மறுப்பு பட்டியலில் இருந்து பார்வதி அம்மாள் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழகத்திற்கு அவரை அழைத்து வர வேண்டும் எனவும் தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21-4-2010 அன்று காலை 10 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னையில், எனது தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.

Advertisements

தமிழ் ஊடகங்களின் அறிவு?

சீமானின் கீழ் கண்ட அறிக்கையை சினிமா பற்றிய செய்திகளிலா இடுவது?

ந்தியாவில் வந்தேறிகள் எல்லாம் சுகவாழ்வு வாழ்கிறார்கள். பாகிஸ்தான் சிறுவனுக்கு சிகிச்சை தருகிறார்கள். ஆனால் ஒரு வயதான தமிழ்த் தாய்க்கு அனுமதி மறுக்கிறார்கள். தமிழர் மீதான துவேஷம் இது” என இயக்குநரும் நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தாய் பார்வதி அம்மாள் தனது உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி விசா பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஈவிரக்கமின்றி மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளன.

உரிய அனுமதி பெற்று வந்த ஒருவரை தடுத்த இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல சட்ட விரோத செயலுமாகும்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இந்தியா உதவியது என்று புகைப்படம் எடுத்து உலகுக்கு தங்கள் மனிதாபிமானத்தை வெளிச்சமிட்டுக்காட்டுபவர்கள் இதில் இரட்டை வேடம் இடுவது ஏன்?

கருனாநிதியின், தொடை நடுங்கி தனத்துக்கு இதுவும் ஒரு சான்று.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள், வெள்ளி்க்கிழமை இரவு மலேசியாவில் இருந்து சென்னை வந்தபோது, அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் மலேசியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டார்.

தொடை காட்டும் ஆட்டத்தை ரசிக்கும் கருனாநிதியின், தொடை நடுங்கி தனத்துக்கு இதுவும் ஒரு சான்று.

பாப்பான் கருனாநிதியின் தமிழின காவலன் வேசம் எப்போ?

பென்னாகரம்

மொத்த வாக்குப்பதிவு- 84%

நம் அரசியல்வாதிகள் நாட்டின் ஜனநாயகத்தை சிற(ரி)ப்பாக்கியதால் அவர்களுக்கு நம் மக்கள் கொடுத்த மார்க். நம்புவோம், கூடிய விரைவில் அவர்கள் 100% வாங்குவார்கள், அப்போது நாமும் வாங்குவோம்?

அவரா? இவரா?

”இது தமிழனுக்கான அரசா?

லகத்தின் கண்கள் பார்த்திருக்க, உப்புக் காற்று மெள்ள மெள்ள உயிர் குடிக்க, நடுக் கடலில் தத்தளிக்கும் ஈழத் தமிழர்கள் இன்னமும் கரை சேரவில்லை. ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒரு சிறிய படகில் 260-க்கும் அதிகமான தமிழர்கள் ‘எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என அனைத்துலகம் நோக்கிக் கையேந்தி நிற்கின்றனர். ஆஸ்திரேலியா மறுக்கிறது. இந்தோனேஷியா எதிர்க்கிறது. என்ன செய்வது, எங்கு போவதெனத் தெரியாமல் இந்தியப் பெருங்கடலில் இப்போதும் தத்தளித்து நிற்கின்றனர் ஈழத் தமிழர்கள்.

01.10.2009-ல் இலங்கையில் தொடங்கிய பயணம் இது. ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அகதிகளாகத் தஞ்சம் கோருவது அவர்களின் நோக்கம். இடையில் இந்தோனேஷியக் கடற் படை மடக்க, ‘நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்றது ஆஸ்திரேலியா. ‘பாதுக£ப்பை’க் காரணம் காட்டி இன்னமும் மறுத்துக்கொண்டேஇருக்கிறது. ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. இலங்கையில் யுத்தமும் முடிந்துவிட்டது. இன்னமும் இவர்களின் கடல் வாழ்க்கை முடியவில்லை. படகின் மிகக் குறைந்த இடத்தில் 260 பேர் நெருக்கி அடித்து வாழ்வதால், நோய்கள் பெருகிக்கிடக்கின்றன. மருத்துவ வசதிகள் இன்றி ஒருவர் இறந்தும்விட்டார். உண்ணாவிரதமும் இருந்து பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. உலகமே பார்த்திருக்க 260 பேரைக் கடல் சிறையில்வைத்துக் கொலை செய்துகொண்டு இருக்கிறோம். ஆனால், இதை ஒரு செய்தியாகக்கூட உலகம் பேசவில்லை. தீபாவளிக்கு பட்டாசும், பொங்கலுக்குக் கரும்பும் விற்கும் ‘சீஸன் பிசினஸ்’ போல இலங்கையில் யுத்தம் நடந்தபோது மட்டும் அதைப் பேசி மறந்து போனோம்.

”கப்பலில் இருக்கும் சொந்தங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை தொலைபேசுகின்றனர். ‘ஏதாவது செய்யுங்கள் அண்ணா’ என்று கதறுகின்றனர். ஓங்கி அழுவதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும் என்னால்? அழுதால்கூட இறையாண்மைக்குக் கேடு வந்துவிடும் என்கிறார்கள். மனிதர்கள் சாவதைப்பற்றி இங்கு யாருக்கும் கவலை இல்லை. இறையாண்மை மட்டும் கெட்டுவிடக் கூடாது. புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சித்திரித்துக் கொன்றொழித்தது, எங்கள் இனத்தைக் கதறடிக்கவும் சிதறடிக்கவும்தானா?” – வெடிக்கும் கோபத்துடன் கேட்கிறார் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சீமான்.

”தமிழர்கள் மீது இவ்வளவு அக்கறைகொண்டுள்ள இந்தியப் பேரரசு, எதை எதையோ உளவுபார்க்கிற இந்தியப் பேரரசு, இந்தோனேஷியக் கடலில் தத்தளிக்கும் தமிழர்களை மட்டும் அறிந்திருக்கவில்லையா? கர்ப்பிணிப் பெண்கள், சின்னக் குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என வாழ வழியற்றவர்கள்தான்அந்தப் படகில் இருக்கின்றனர். வேறு கதியற்ற அவர்களை அன்போடு அரவணைத்து, ‘எங்கள் நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் ஏதிலிகளாக வாழ்ந்து வருகின்றனர். அந்த உறவுகளோடு நீங்களும் வாழுங்கள்’ என்று அழைத்து வருவதில் இந்தியாவுக்கு என்ன பிரச்னை? 25 ஆண்டு கால யுத்தத்தில் ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழ்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து அந்த 260 பேரும் வாழ்வதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.

இதற்கு முதலில் தமிழக அரசு ‘அவர்களைத் தமிழ்நாட்டுக்கு அனுப்புங்கள் நாங்கள்பார்த்துக் கொள்கிறோம்’ என்று மத்திய அரசிடம் முறை யிட வேண்டும். அதன் பிறகு, அனைத்துலக விதிகளுக்கு உட்பட்டு, இந்திய அரசு தலையிட்டு அவர்களை அழைத்து வர வேண்டும். ஆனால், தமிழக அரசு ‘இலங்கையில் ஓர் இனப் படுகொலை நடந்திருக்கிறது’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற் றக்கூட முயற்சிக்கவில்லை. தமிழர்களை நடுக்கடலில் சாகவிட்டு, புதிய சட்டமன்ற வளாகமும், உலகச்செம் மொழி மாநாடும் யாருக்காக? இதைத் தமிழக அரசு என்றோ, தமிழனுக்கான அரசு என்றோ நாங்கள் எப்படி நம்புவது? எல்லாத் தேசங்களுக்கும் ஓர் இறையாண்மை இருப்பதுபோல, தமிழன் என்ற தேசிய இனத்துக்கு என ஒரு தனித்த இறையாண்மை இருக் கிறது. அதை ஏன் மறந்தீர்கள்? தலையைப் பறிகொடுத்து விட்டு அப்புறம் எங்கே இருந்து தமிழனென்று சொல்லித் தலை நிமிர்ந்து நிற்பது?

இந்தியக் கடல் எல்லையில் கிட்டத்தட்ட 500 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ‘புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார்கள். அதனால் சுட்டோம்’ என்று இலங்கை அரசு காரணம் சொல் லியது. ஆனால், ‘என் நாட்டு மீனவன் ஆயுதம் கடத்தினான் என்று சுட்டுக் கொன்றாயே… அவன் கடத்திய ஆயுதங்கள் எங்கே?’ என்று ஒரு முறைகூட இந்தியா கேட்டது இல்லை, இலங்கையும் கொடுத்தது இல்லை. உலகத்தின் வலிமைமிக்க ராணுவம் கடல் எல்லையில் தன் நாட்டு மீனவனுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால், 500 பேர் சுடப்பட்டபோது ஒரேஒரு தடவையேனும் இந்தியக் கடற்படை நம் மீனவர்களைக் காப்பாற்ற முயற்சித்தது இல்லை. அல்லது சிங்களக் கடற்படையைத் திருப்பித் தாக்கியதாக ஒரு செய்திகூட இல்லை. அப்படியானால், நீங்கள் செய்வது பாதுகாப்புப் பணியா? உல்லாசப் பயணமா? அன்று புலிகள் இருந்தார்கள் சரி. இன்று யாரும் இல்லை. இப்போதும் தமிழக மீனவனை சிங்கள ராணுவம் சுடுகிறது, அடிக்கிறது. வழமைபோல் இந்திய ராணுவம்வேடிக்கை பார்க்கிறது. அப்படியானால், இந்திய இறையாண்மை என்பது தமிழர்களுக்கு எதிரானதோ என்ற சந்தேகமும், அச்சமும் எனக்கு வருமா, இல்லையா?

இத்தனை கோடி மக்கள் வேடிக்கை பார்த்திருக்க, இந்த நவீன யுகத்தில் பட்டினியிலும், பிணியிலும் அம்மக்களைத் தவிக்கவிடுவது பெரும் பாவம். இல்லை எனில், கடலில் கதறித் துடிக்கும் ஒவ்வொரு தமிழனின் குரலும் இந்த இனத்தின் நீங்காச் சாபமாக மாறும். இத்தனை கோடி மனிதர்கள் வாழும் உலகில் தங்களுக்கு ஓர் ஆதரவு இல்லையே என்று ஏங்கி ஏங்கி, எம் தமிழ் மக்கள் உதிர்க்கும் ஏக்க வெப்பம் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் நிரந்தரச் சாபமாகும்!”

நன்றி- ஜூனியர் விகடன்