பெண்

அன்பு மிகுதியால் அம்மாவென்கையில் , பாசத்துடன் தங்கையை அழைக்கையில் அவர்கள்
பெண் என்பதை மறந்து உறவாகத்தான் காண்கிறோம் .

நிச்சயமாக பெண் சமூக ரீதியாக ஒடுக்கப்படுகிறாள் என்பதை நாம் மறுக்கவே செய்கிறோம்

அன்புடன் கூடவே அதிகாரத்தை எடுத்துகொள்கிறான் ஆண் .

எவ்வளவு நேரமாச்சு சோறு போடுகிறாயா இல்லையா என்பதை
மகனின் அன்பான மிரட்டலாகத்தான் காண்கிறாள் தாய்

இம்புட்டு நேரமா எங்கடி போன அவனவனுக்கு பசி உயிர் போகிறது
என்கையில் பாசமிகு கணவனின் பசி பிரச்சனையாக காண்கிறாள் பெண்

அம்மாவுக்கு சின்ன உதவி செய்டா கண்ணா இந்த பாத்திரத்தை
கழுவி கொடேன் என கேட்கும் போது

ஏங்க கொஞ்சம் இந்த குழந்தையை பார்த்துகிட்டீங்கன்னா சோத்த வடிச்சிடுவேன்
என மனைவி சொல்லும் போது

தன்மீதான வேலை சுமத்தலாக கருதி செய்யாமல் போகும் ஆண் .

சமூக தளத்தில் அதையே செய்கிறான்

பெண்ணுக்கு இட ஒதுக்கீடா என முறைக்கிறான்

பெண்ணுக்கு எதிரா பெண்ணை ஏவுகிறான் ன்கல்

பெண்ணுக்கு என்ன தெரியும் எனும் நினைப்பு குழந்தையில் இருந்தே ஊட்டி வளர்க்கப்படுகிறது

பெண்ணை விடுவிக்கையில் முதலில் வீட்டில் இருந்துதான் தொடங்க வேண்டும்

சமையல் பாத்திரம் விளக்கதடா அய்யோ உன்னைபோய் அம்மா வேலை வாங்கும்படி
ஆகிடுச்சே

அடுத்த வீட்டு ஆண் துணி துவைக்கையில் இதெல்லாம் ஒரு ஆம்பிளை செய்கிற
வேலையா என பேசும் பெண்கள் வரை இங்கே

இது ஆணின் வேலை இது பெண்ணின் வேலை என பாகுபடுத்து ஆணாதிக்கம்
வளர்க்கப்படுகிறது

எங்கோ தூர தொலைவில் வேலைக்கு செல்லும் ஆண்கள் இன்று சமைத்துதான்
ஆகவேண்டும்

துணியை அப்படியே கழட்டி போட்டு விட்டு போக முடியாது அம்மா எல்லா இடத்திலும்
வரமுடியாது துணி துவைச்சு கொடுக்க .

பெண்ணை வேலைக்கு அனுப்புவது கூட கூடுதலாக வருமானம் கிடைக்குமே எனும்
நினைப்பே தவிர அந்த வீட்டிலும் அவள் தான் அனைத்து வேலையும் செய்யனும்

ஆனால் காவியங்கள் புராணங்களில் பெண்ணை புகழ்வதற்கு நம்மைவிட்டால்
ஆள் கிடையாது .

கற்பிற்கு எடுத்துக்காட்டு என சொல்லி பெண்ணை உசுப்பேத்தவும்
கற்பிழந்தவளை கல்லால் அடிக்கனும் என சொல்லவும் நாம் பழகி இருக்கிறோம்

கலாசாரம் கலாசாரம் என கத்தும் நபர்கள் கவனிக்க இதெல்லாம்தான்
அந்த கலாசாரத்தின் சரடுகளாக வந்து கொண்டு இருக்கிறது

//

ராக்கெட் விட அதில் ஏறி செல்லவும் பெண்கள் முன்னேறி விட்டார்கள்
என சொல்லுகிறோம் ஆனால அது எத்தனை சதவீதம் என்பது
முக்கியம்

ஒரு டூவிலரில் செல்லும் பெண்ணை முந்தி சென்று திரும்பி
பார்த்து ஆணாகிய உன்னை ஆண் என எத்தனை நாள் நிரூபிப்பாய்

சக மனுசியாக பார்த்தால் சமூக வளர்ச்சியில் அவளி ன் பங்கு ஆணை விட
அதிகமாய் தான் இருக்கும்

எல்லாத்தையும் வீட்டு காரர் பார்த்துகொள்வார் என சீரியலில் மூழ்கி
சித்திக்காக திருமதி செல்வத்துக்காக அழும் பெண்கள்
அதிகமானது ,

சமையல் குறிப்புகளை சுமந்து வரும் ஏடுகள் அதிகம் விற்பது

இதுதான் இன்னைக்கு பெண்கள் வெளியே வந்து செய்து இருக்கும்
ஆக பெரிய போராட்டம்

இன்னும் அனைத்து தளத்திலும் பெண்கள் வரவேண்டும்

அவர்கள் ஆணைவிட அதிக அழுத்தம் நிரைந்த போராட்டங்களை
நடத்துவார்கள் .

அதற்கு பெண்கள் ஆணுக்கு சமமானவர்கள் எனப்து வீட்டில்
இருந்தே கொண்டு வரப்பட வேண்டும் ஆணாலும் பெண்ணாலும்

அவள் நமது சக உயிரினம் எனும் எண்ணம் வளர்ந்தால்
நாம் மனிதர்கள் இல்லாவிட்டால் என்ன சொல்ல

Advertisements

அம்மா